மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு + "||" + Rajiv Gandhi Memorial Day in Tuticorin

தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி பொதுச் செயலாளர் ரொனால்டு வில்லவராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

ஏரல் மணிக்கூண்டு அருகில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 28-வது கட்ட விசாரணை இன்று தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய 28-வது கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
3. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
4. தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.