9 மதுக்கடைகள் இன்று திறப்பு; பொதுமக்கள்- வணிகர்கள் எதிர்ப்பு


9 மதுக்கடைகள் இன்று திறப்பு; பொதுமக்கள்- வணிகர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 May 2020 6:37 AM IST (Updated: 22 May 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 65 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் 55 கடைகள் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்படுகின்றன.

தர்மபுரி, 

 தர்மபுரி நகர பகுதியில் உள்ள 9 கடைகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் உள்ள பிரச்சினை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக திறக்கப்படாமல் தொடர்ந்து மூடிவைக்கப்பட்டிருந்தன. கிராமப்புற பகுதியில் ஒரு கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தர்மபுரி நகரில் உள்ள 9 மதுக்கடைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து உள்ளனர். இந்த மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story