செந்துறை ஊராட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார்


செந்துறை ஊராட்சியில்   ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி   முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார்
x
தினத்தந்தி 22 May 2020 2:25 AM GMT (Updated: 22 May 2020 2:25 AM GMT)

செந்துறை ஊராட்சிக்குட்பட்ட திருநூத்துப்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசியை அ.திமு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் வழங்கினார்.

செந்துறை, 

நத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 97 ஆயிரத்து 324 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் சார்பில் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. செந்துறை, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி நடந்து வருகிறது. அதில் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட திருநூத்துப்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசியை அ.திமு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவரும், நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் ஒன்றிய செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு, தொழிலதிபர் வி.அமர்நாத், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜெயபாலன், நகர செயலாளர் சிவலிங்கம், கூட்டுறவு வங்கி தலைவர் ஷேக்தாவூது, ஊராட்சிமன்றத்தலைவர்கள் சிரங்காட்டூப்பட்டி செல்வி வீரன், செந்துறை சவரிமுத்து, துணைத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல்ரசீது, ஊராட்சி செயலர் சின்னு, ஒன்றிய கவுன்சிலர்கள் சார்லஸ், செல்வராஜ், பெசலிசின்னடைக்கன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story