தேனி, கம்பத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேனி, கம்பத்தில்   சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 3:19 AM GMT (Updated: 22 May 2020 3:19 AM GMT)

தேனி, கம்பம் ஆகிய இடங்களில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தமிழகத்தில் மீண்டும் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்க வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி, கம்பம் ஆகிய இடங்களில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கம்பத்தில் காந்தி சிலை ஆட்டோ நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் லெனின் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலகுருநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story