மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி அவதூறு; 2 பேர் மீது வழக்கு + "||" + Meenakshi Amman About libel; Case against 2 people

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி அவதூறு; 2 பேர் மீது வழக்கு

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி அவதூறு; 2 பேர் மீது வழக்கு
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பற்றி முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்த 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை,

மதுரை மாவட்ட வி.எச்.பி. தலைவர் வக்கீல் சந்திரசேகரன் ஆன்லைன் மூலம் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அதில் கொரோனா ஊரடங்கால் கடந்த 4-ந் தேதி நடந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவம் உள் திருவிழாவாக நடந்தது. அதனை பொதுமக்கள் வீட்டிலிருந்து இணையதளம் வழியாக பார்க்க அரசு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வை ஆன்டோ லெனி, கலிம் முகமது ஆகியோர் முகநூல் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்திருந்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆன்டோ லெனி, கலிம் முகமது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.