ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்ககோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்ககோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 5:02 AM GMT (Updated: 22 May 2020 5:02 AM GMT)

நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் வழங்ககோரி கரூரில், ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 

நிவாரண தொகை ரூ.15 ஆயிரம் வழங்ககோரி கரூரில், ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கந்தசாமி, தண்டபாணி, ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ டிரைவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல்...

ஆட்டோக்கள் ஓட்ட அனுமதிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். புதுப்பித்தல் கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும், ஆட்டோ கடன் தவணை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story