ஊரடங்கால் மின்மாற்றிகள் பழுது நீக்க முடியாத நிலை: பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்பு


ஊரடங்கால் மின்மாற்றிகள் பழுது நீக்க முடியாத நிலை: பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 6:11 AM GMT (Updated: 22 May 2020 6:11 AM GMT)

ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதான மின்மாற்றிகளை பழுது நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.

கீரமங்கலம், 

ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதான மின்மாற்றிகளை பழுது நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.

மின்மாற்றிகள் பழுது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் முழுமையாக விவசாயம் நிறைந்த பகுதி. விவசாயத்திற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து காய்கறிகள், பழங்கள், பூக்கள், நெல், வாழை போன்ற பல்வேறு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் மும்முனை மின்சாரம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே கிடைப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களிலும் மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது.

ஊரடங்கால் முடக்கம்

கீரமங்கலம் கொடிக்கரம்பை பகுதியில் ஒரு மின்மாற்றி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பழுதாகி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதனால் அந்த மின்மாற்றி மூலம் மின்சாரம் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வந்து மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தான் நீர்மூழ்கி மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்கிறோம். கோடை வெயில் தொடங்கிவிட்டால் அடிக்கடி மின்மாற்றிகள் பழுதாவது தொடர்கதையாக உள்ளது. தற்போது கொடிக்கரம்பை மின்மாற்றி பழுதாகிவிட்ட நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் மாற்று மின்மாற்றிகள் இல்லாததால் 10 நாட்கள் கடந்தும் சீரமைக்கப்படவில்லை. இதே போல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு காரணமாக 30-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதாகி சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகளும், குடி தண்ணீருக்காக பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story