தஞ்சை மாவட்டத்தில் லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்
தஞ்சை மாவட்டத்தில் லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
லாரி டிரைவர்
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 32 வயது லாரி டிரைவர். இவர் உத்தரபிரதேசத்திலிருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மார்க்கெட்டுக்கு கடந்த 8-ந்தேதி வந்தார். அப்போது, இவருக்கு தஞ்சை மாவட்ட எல்லையான நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தாராசுரம் மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், இந்த மார்க்கெட்டுக்குள் லாரி டிரைவர் சென்று மற்றவர்களிடமும் பேசியதால், மார்க்கெட்டை சார்ந்த 400-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. இதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
வீடு திரும்பினார்
இந்தநிலையில், லாரி டிரைவர் குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story