கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,
ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு களில் பணம் எடுக்கும் திட்டத்தில் இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும், வேலைநேரத்தை உயர்த்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும், பஞ்சப்படியை நிறுத்த கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில செயலர் சுகுமாறன், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க செயலாளர் கருணாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் நிர்வாகிகள் ரட்சகநாதன், விஜயகுமார் உள்ளிட்ட தபால்துறை ஊழியர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story