கேட்பாரற்று கிடந்த 6 உடல்களை தகனம் செய்த பெண் போலீசுக்கு மந்திரி பாராட்டு


கேட்பாரற்று கிடந்த 6 உடல்களை தகனம் செய்த பெண் போலீசுக்கு மந்திரி பாராட்டு
x
தினத்தந்தி 23 May 2020 5:08 AM IST (Updated: 23 May 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

கேட்பாரற்று கிடந்த 6 உடல்களை தகனம் செய்த பெண் போலீசுக்கு மந்திரி அனில் தேஷ்முக் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மும்பை தாராவி சாகுநகர் போலீஸ் நிலையத்தில் சந்தியா ஷிலாவந்த் என்பவர் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணி நேரத்தில் ஒரே நாளில் ஆஸ்பத்திரிகளில் கேட்பாரற்று கொரோனாவினால் பலியான 4 உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார். பின்னர் தானே பெற்று கொண்டு அந்த உடல்களை தகனம் செய்து உள்ளார்.

இவரது செயல் பற்றி அறிந்த உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பெண் போலீஸ் சந்தியா ஷிலாவந்திற்கு டுவிட்டர் மூலம் தனது பாராட்டை தெரிவித்து உள்ளார்.

இது பற்றி சந்தியா ஷிலாவந்த் கூறுகையில், இது எனது கடமை, இதுபோன்று கேட்பாரற்று கிடக்கும் உடல்களை சவக்கிடங்கில் வைக்க இடம் இ்ல்லை. இதனால் அந்த உடல்களை நானே கொண்டு சென்று தகனம் செய்தேன். இதில் எனக்கு ஒன்றும் பயம் இல்லை. ஊரடங்கு சமயத்தில் இது வரையில் கேட்பாரற்று கிடந்த 6 உடல்களை அடக்கம் செய்துள்ளேன். எனக்கு கணவர் உள்பட யாரும் ஒத்துழைப்பு வழங்க வில்லை.

நான் எனது பணியை திறம்பட செய்த மனநிறைவு கிடைத்து இருக்கிறது, என்றார்.

Next Story