மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது


மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2020 5:39 AM IST (Updated: 23 May 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

தக்கோலம் அருகே மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம், 

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள முருங்கை கிராமத்தில் 3 பேர் பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் ஏற்றி செல்ல முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணல் கடத்த முயன்ற பன்னீர்செல்வம் (வயது 23), பொன்னுரங்கம் (24), மணிகண்டன் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதேபோல முருங்கை கிராமத்தில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிச்சென்ற டிராக்டரை அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் பறிமுதல் செய்து, தக்கோலம் போலீசில் ஒப்படைத்தனர்.

Next Story