மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல் + "||" + You can apply for the Chief minister State Youth Award - Collector Information

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,

2015ம் ஆண்டில் இருந்து முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50 ஆயரம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாகும். 2020ம் ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 2020 மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.04.2019 முதல் 31.03.2020 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகழங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இந்த விருதுக்கு இணையதளம் மூலம் வருகிற ஜூன் 30-ந் தேதி அன்று மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமாப்பித்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலக வேலை நாட்களில் 04175233169 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்தத் தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.