ஊரடங்கால் பொதுமக்கள் வரவில்லை; கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை வெறிச்சோடியது


ஊரடங்கால் பொதுமக்கள் வரவில்லை; கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 23 May 2020 2:45 AM GMT (Updated: 23 May 2020 2:45 AM GMT)

தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதி புனித தீர்த்த தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஆடிப்பெருக்கு, அமாவாசை உள்பட முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூடி புனித நீராடுவார்கள்.

தேவூர், 

 சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோவில் திருவிழாவுக்கு இங்கு வந்து தான் புனித நீர் எடுத்து செல்வார்கள். 

மேலும் அமாவாசை நாளில் இங்கு வரும் பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், தோஷம் கழித்தல், பரிகார பூஜை செய்தல் என பல்வேறு பூஜைகளை செய்கின்றனர். மேலும் அங்குள்ள அங்காளம்மன் கோவிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

 இந்த நிலையில் நேற்று அமாவாசை என்றாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அங்காளம்மன் கோவிலும் வெறிச்சோடி இருந்தது.

Next Story