மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + Emphasizing various demands Confederation of Trade Unions

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர், 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும், புதிய மின்சார திட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பணியாளர்களின் அகவிலைப்படி, நிரந்தர நிலுவைத்தொகையை மறுக்குகிற நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கு தலா ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவமனை மற்றும் உள்ளாட்சி துப்புரவு பணிகளில் ஈடுபடும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்துவதை கண்டித்தும், ஓய்வூதியபிடித்தம், தொழிலாளர் நலச்சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்துசெய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.