விழுப்புரம்- பண்ருட்டி சாலையில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி


விழுப்புரம்- பண்ருட்டி சாலையில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி
x

விழுப்புரம்- பண்ருட்டி சாலையில் கோலியனூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து, சகாதேவன்பேட்டை, ராமையன்பாளையம், சுந்தரிப்பாளையம், பஞ்சமாதேவி, சின்னக்கள்ளிப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் விழுப்புரம் வந்து செல்கின்றனர்.

விழுப்புரம், 

 கடலூர்- கும்பகோணம் மார்க்கங்களில் செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் சென்று வருகின்றன. 

அதுமட்டுமின்றி விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கம் செல்லும் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இந்த கேட்டை கடந்துதான் செல்கிறது. இந்த தண்டவாளத்திற்கு இடையே உள்ள சிலாப் கற்கள் பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. 

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் ரெயில் போக்குவரத்து இல்லாததை பயன்படுத்தி இங்குள்ள ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி நேற்று இங்குள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. ரெயில்வே ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றி பேக்கேஜிங் எந்திரம் மூலம் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர். 

இந்த பணிகள் காரணமாக விழுப்புரம்- பண்ருட்டி, கடலூர் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் நேற்று அரசூர் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.

Next Story