சிதம்பரத்தில் குடிமராமத்து பணிகள்; பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


சிதம்பரத்தில் குடிமராமத்து பணிகள்; பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 May 2020 10:42 AM IST (Updated: 23 May 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் வட்டம் கடவாச்சேரி, அகரநல்லூர், பழையநல்லூர், சாமியார், கூத்தன்கோவில் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் கான்சாகிப் வாய்க்கால்களின் வடிகால் நீரினை பயன்படுத்தி பாசன வசதி பெறுகின்றனர்.

சிதம்பரம், 

 தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டம் 2020-21 ஆண்டின் கீழ் கான்சாகிப் வாய்க்கால் மூலம் பாசன நீரினை பயன்படுத்துவோர் நல சங்கத்தின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 இந்த பணியை சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் செல்வகணபதி, நிர்வாகிகள் பிரம்மராஜன், நாஞ்சலூர் மணி, ராகேஷ்வர்மா, தமிழ்வாணன், பிச்சாவரம் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story