மாவட்ட செய்திகள்

அருப்புக்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் + "||" + Modern machine for spraying antiseptic in Aruppukkottai

அருப்புக்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

அருப்புக்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்க நவீன எந்திரம்  சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
அருப்புக்கோட்டையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் கை எந்திரத்தை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கை எந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கால விரையம் ஏற்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் சுகாதார பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டு வந்தது. எனவே நகராட்சி நிர்வாகம் நவீன எந்திரத்தை வாங்கியுள்ளது. இந்த எந்திரத்தை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், “நவீன எந்திரத்தில் இருந்து வெளியேறும் கிருமிநாசினி காற்று மூலம் செலுத்தப்படுவதால் உயரமான கட்டிடங்கள், தெருக்களில் பரவலாக தெளிக்கப்படும். இதனால் தினந்தோறும் நகரின் பெரும்பான்மையான பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளலாம்” என்றார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் சேர்மக்கனி, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், தி.மு.க. நகர செயலாளர் மணி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி, சரத்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.