கொரோனாவால் பாதிப்புக்குள்ளான சிறுவன் உள்பட 12 பேர் வீடு திரும்பினர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உள்பட 12 பேர் நேற்று வீடு திரும்பினர்.
சிவகங்கை,
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மராட்டியம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர் திரும்பினர்.
அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
12 பேர் அனுப்பி வைப்பு
இந்நிலையில் ஏற்கனவே ஒரு சிறுமி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 9 வயது சிறுவன் உள்பட 12 பேர் பூரண குணமடைந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு, மருத்துவ அலுவலர் மீனா மற்றும் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இன்னும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story