பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை அரியலூரில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்


பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை அரியலூரில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்
x
தினத்தந்தி 23 May 2020 11:48 AM IST (Updated: 23 May 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. அரியலூரில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. அரியலூரில் 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்ந்து சிகிச்சை

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 137 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், கடந்த 15-ந் தேதி மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டிருந்ததால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137-ல் இருந்து 139 ஆக உயர்ந்திருந்தது. அதனை தொடர்ந்து ஒரு வாரமாக நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் யாரும் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்த 139 பேரில், 122 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருந்து 3 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் 6 பேரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும் என பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 12 பேர் கொரோனா வைரசுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 36 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

5 பேர் மட்டுமே

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதேபோல் நேற்றும் அரியலூர் மாவட்டத்தில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மொத்தம் 355 பேரில், 350 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் தற்போது அரியலூர் மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே, கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 35 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

Next Story