மாவட்ட செய்திகள்

ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் கூடுதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை இயக்குனர் தகவல் + "||" + Extra telephone medical advice service from tomorrow in Jipmar

ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் கூடுதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை இயக்குனர் தகவல்

ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் கூடுதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை இயக்குனர் தகவல்
ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் தொலைபேசி மருத்துவ சேவைகள் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி,

புதுவை கோரிமேடு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகளின் வசதிக்காக தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி தொடங்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் பொதுமக்கள் மருத்துவ சேவைகளை சுலபமாக பெறுவதற்காக கூடுதல் தொலைபேசி எண்கள் சேவை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்படுத்தப்பட உள்ளது.


இந்த தொலைபேசி எண்கள் மூலம் வெளிப்புற சேவைகளை மக்கள் எளிதாக பெற முடியும். அந்த எண்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது. அதன்படி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சனிக் கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் செயல் படும்.