மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு + "||" + 7 Days of Solitary Monitoring for People from Tamil Nadu

தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் இருந்து வருபவர்களை 7 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் ஓட அனுமதிக்கப்பட்டு உள்ளன. ரெயில் போக்குவரத்தும் தொடங்கிவிட்டது.


இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் அரசு முடிவு செய்துள்ள ஓட்டல்களில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு 5-வது மற்றும் நாள் 7-வது நாளில் 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானால், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களின் வீடுகளில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த மாநிலங்களில் இருந்து வரும் கர்ப்பிணி பெண்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள், ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் நேரடியாக தனிமை முகாம் இன்றி நேரடியாக வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த 6 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங் களில் இருந்து வருபவர்களுக்கு தனிமை முகாமில் தங்க வைக்கும் முடிவு கைவிடப்படுகிறது. அவர்கள் தங்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...