கடலூர் தேவனாம்பட்டினம் தற்காலிக மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
கடலூர் தேவனாம்பட்டினம் தற்காலிக மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
கடலூர்,
கடலூர் தேவனாம்பட்டினம் தற்காலிக மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.
புயல் எச்சரிக்கை
கடலூர் தேவனாம்பட்டினம் செல்லும் பாலம் அருகில் தற்காலிக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் கடலூர் நகர மக்கள் சென்று மீன்களை வாங்கி வருகின்றனர். மீன் பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் சிறிய வகை படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்து, அதை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக அவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். நேற்று அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் சங்கரா, கவளை மீன்கள் அதிக அளவில் சிக்கியது. இதை தற்காலிக மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
கூட்டம் அலைமோதியது
கடந்த சில நாட்களாக மீன்கள் கிடைக்காமல் இருந்ததால், நேற்று மீன்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். கொடுவா ஒரு கிலோ ரூ.700, கானாங்கத்தை ரூ.300, வஞ்சிரம் ரூ.1000, சங்கரா ஒரு கிலோ ரூ.500, கவளை ரூ.200, கிளி மீன் ரூ.250, பாறை ரூ. 500, நண்டு ரூ.200, நாக்கு மீன் ரூ.300, கெண்டை ரூ.200, நெத்திலி ரூ.150 என விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் இதை விட அதிக விலைக்கும் விற்பனை செய்தனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) மீன் மார்க்கெட் இருக்கும். வருகிற 29-ந்தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மார்க்கெட் செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story