மராட்டியத்தில் இதுவரை 1,671 போலீசார் கொரோனாவால் பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் இதுவரை 1,671 போலீசார் கொரோனாவால் பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 May 2020 5:06 AM IST (Updated: 24 May 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இதுவரை 1,671 போலீசார் கொரோனாவால் பாதிப்பு 18 பேர் உயிரிழப்பு

மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் அந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் போரில் களத்தில் நின்று போராடும் போலீசார் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை மாநிலம் முழுவதும் 1,671 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 174 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.

இதுவரை அதிகாரி ஒருவர் உள்பட 18 போலீசாரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது.

குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் அதிகளவில் போலீசார் இந்த நோய் தொற்றின் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். போலீஸ் உயிரிழப்பும் இங்கு தான் அதிகம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 42 அதிகாரிகள் மற்றும் 499 போலீஸ்காரர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

ஊரடங்கை அமல்படுத்தும் நடவடிக்கையின் போது போலீசார் மீது 246 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 85 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் காயம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story