மாவட்ட செய்திகள்

‘கவர்னர், உத்தவ் தாக்கரே இடையேயான உறவு தந்தை-மகன் போன்றது' ஞ்சய் ராவத் சொல்கிறார் + "||" + The relationship between Governor and Uttav Thackeray is like father-son '

‘கவர்னர், உத்தவ் தாக்கரே இடையேயான உறவு தந்தை-மகன் போன்றது' ஞ்சய் ராவத் சொல்கிறார்

‘கவர்னர், உத்தவ் தாக்கரே இடையேயான உறவு தந்தை-மகன் போன்றது' ஞ்சய் ராவத் சொல்கிறார்
‘கவர்னர், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இடையேயான உறவு தந்தை மகன் போன்றது' என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த புதன்கிழமை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ராஜ் பவனில் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநில அரசின் தலைமை செயலாளர் அஜாய் மேத்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதற்காக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த பிறகு சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன். கவர்னர் மற்றும் முதல்-மந்திரி இடையே எந்த மோதலும் இல்லை. அவர்கள் இடையேயான உறவு தந்தை, மகன் போன்றது. அவர்கள் தொடர்ந்து அப்படியே தான் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா ஊரடங்கால் எம்.எல்.சி. தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், உத்தவ் தாக்கரேயின் முதல்-மந்திரி பதவி ஊசலாடியது. இந்த நிலையில் தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் கமிஷனுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதினார். அதன்படி தேர்தல் நடத்தப்பட்டதால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் பதவி தப்பியது குறிப்பிடத்தக்கது.