குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமகிரி கண்மாயை சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை பரமசிவம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமகிரி கண்மாயை சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை பரமசிவம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 May 2020 5:35 AM IST (Updated: 24 May 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிரி கண்மாயை சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது.

குஜிலியம்பாறை, 

தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிரி கண்மாயை சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் தலைமை தாங்கி பணியினை தொடங்கி வைத்தார். 

ஆர்.கோம்பை ஊராட்சி தலைவர் மலர்வண்ணன், மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமகிரி கண்மாய் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டு, தடுப்புசுவர் அமைக்கப்பட உள்ளது. 

இதன் மூலம் சுற்றுவட்டார கிராமங்களான தளிப்பட்டி, வடுகம்பாடி, நாயக்கனூர், ராமகிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம் பழனி செயற்பொறியாளர் கோபி, வேடசந்தூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், வடுகம்பாடி ஊராட்சி தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்வடிவு கணேசன், ஆர்.கோம்பை கிராம விவசாய சங்க தலைவர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story