அம்மையப்பன், திருமதிகுன்னம் பகுதிகளில் உள்ள ஓடம்போக்கியாறு, காட்டாற்றில் தூர்வாரும் பணிகள் கலெக்டர் ஆனந்த் ஆய்வு
அம்மையப்பன், திருமதிகுன்னம் பகுதிகளில் உள்ள ஓடம்போக்கியாறு மற்றும் காட்டாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
கொரடாச்சேரி,
அம்மையப்பன், திருமதிகுன்னம் பகுதிகளில் உள்ள ஓடம்போக்கியாறு மற்றும் காட்டாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார்.
ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டத்திற்கு உட்பட்ட அம்மையப்பன் பகுதியில் உள்ள ஓடம்போக்கியாறு மற்றும் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட திருமதிகுன்னம் பகுதியில் உள்ள காட்டாறு ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கண்காணிப்பு குழு
ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர்் அறிவித்துள் ளார். இதையடுத்து நமது மாவட்டத்தில் அனைத்து தூர்வாரும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் பணிகளை முடிப்பதற்கு தேவையான எண்ணிக்கையில் எந்திரங்களை கொண்டு தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப அதிக திறன் கொண்ட எந்திரங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி கடைமடை வரை தண்ணீர் கொண்டு சேர்க்க அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார 106 பணிகள் ரூ.22 கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓடம் போக்கி யாறு ரூ.40 லட்சம் மதிப் பீட்டில் 6 கி.மீ. தூரத்திற்கும், காட்டாறு ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 8.15 கி.மீ. தூரத்திற்கும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story