ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்களுக்கு நல உதவி - பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்
ரம்ஜான் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சென்னை,
ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கும், ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், ஐந்து வகையான காய்கறிகள், சேலை போன்ற நிவாரண நலத்திட்ட பொருட்களை தே.மு.திக. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, உயர்மட்டகுழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.தினகர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விசாகன்ராஜா, வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story