கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மந்திரி சுதாகர் தகவல்


கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 25 May 2020 3:45 AM IST (Updated: 25 May 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 8-ந் தேதியுடன் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு கடந்த 16 நாட்களில் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது இன்று (நேற்று) வரை 2 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 57 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்படுகின்றன. டாக்டர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story