மாவட்ட செய்திகள்

சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 1,540 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார் + "||" + 1,540 Food items for poor families

சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் 1,540 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார்

சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில்  1,540 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார்
திருப்பூரில் இடங்களில் 1,540 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் உணவு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட ஆத்துப்பாளையத்தில் பாரதிநகர், அம்பேத்கர் நகர், முத்துநகர், சத்யாநகர், பட்டத்தரசியம்மன் கோவில் வீதி, நேதாஜிநகர், கருப்பராயன் கோவில் வீதி, அன்னை சத்யாநகர் ஆகிய 8 இடங்களில் 1,540 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார்ஸ் இளைஞர் பேரவையின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை வாங்கிச்சென்றனர். இதில் மாநகர துணை செயலாளர் அமர்நாத், கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் ரவி, நாகேந்திரன், சேது, வெங்கடேஷ், சண்முகம், குருராஜ், வடிவேல், மாரிமுத்து, சையது, பெருமாள், ரஞ்சித், சங்கர், பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 1,000 பட்டதாரிகளுக்கு திறனை வளர்க்க தொழில் பயிற்சி திட்டம் - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
1,000 பட்டதாரிகளுக்கு திறனை வளர்க்க தொழில் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
2. கொரோனாவுக்கு எதிராக போராட 21,752 பேர் விருப்பம் நன்றி தெரிவித்து உத்தவ் தாக்கரே கடிதம்
கொரோனாவுக்கு எதிராக போராட விருப்பம் தெரிவித்த 21 ஆயிரத்து 752 பேருக்கு முதல்-மந்திரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
3. மும்பையில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக 1,500 இடங்களில் நோய் பரப்பும் கொசுபுழுக்கள் கண்டுபிடித்து அழிப்பு மாநகராட்சி தகவல்
மும்பையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,479 இடங்களில் நோய் பரப்பும் கொசுபுழுக்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4. திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தங்கி இருந்த 1,425 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பீகார் பயணம்
திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தங்கி இருந்த 1,425 தொழிலாளர்கள் பீகாருக்கு குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
5. 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு; ஒருவர் கைது
காரையூர் அருகே 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டு போலீசார் ஒருவரை கைது செய்தனர்.