மும்பையில் இருந்து உள்நாட்டு விமான சேவையை தொடங்க கால அவகாசம் மத்திய அரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்


மும்பையில் இருந்து உள்நாட்டு விமான சேவையை தொடங்க கால அவகாசம் மத்திய அரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 May 2020 11:30 PM GMT (Updated: 24 May 2020 11:15 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையை தொடங்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

கொரோனா வைரஸ் மராட்டியத்தில் கடும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்ட போதிலும் இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தபாடாக இல்லை.

மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் தான் முதல் இடத்தில் உள்ளது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 2 மாதங்களாக விமான சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார்.

ஆனால் மராட்டியத்தில் விமான சேவையை தொடங்க அனுமதிக்க முடியாது என நேற்றுமுன்தினம் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆன்லைனில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

நான் இன்று (நேற்று) மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரியுடன் பேசினேன். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை தொடங்க சிறிது கால அவகாசம் வேண்டும் என வலியுறுத்தினேன். மாநிலத்தின் மற்ற இடங்களில் இருந்து மாணவர்கள், மருத்துவ அவசர நிலைகளுக்காக மட்டும் குறைந்தபட்ச விமான சேவைகளையே இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story