தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் தொட்டியில் தாகம் தணித்த காட்டு யானை


தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் தொட்டியில் தாகம் தணித்த காட்டு யானை
x
தினத்தந்தி 25 May 2020 12:35 AM GMT (Updated: 25 May 2020 12:35 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, அய்யூர், ஜவளகிரி, உரிகம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.


தேன்கனிக்கோட்டை,

கோடை காலங்களில் இந்த வனவிலங்குகளின் குடிநீர் தாகத்தை தணிக்கும் வகையில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வனவிலங்குகள் கோடையில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகின்றன.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள உரிகம் வனப்பகுதியில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் காட்டுயானை ஒன்று நீண்ட நேரம் தண்ணீர் குடித்தது. இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் படம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

Next Story