பழனி பாலாறு அணை, வாய்க்கால் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
பழனி பாலாறு அணை, வாய்க்கால் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
பழனி,
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி பகுதியில் உள்ள பாலாறு அணை, கலையம்புத்தூர் வரத்து வாய்க்கால் ஆகியவற்றில் நேற்று குடிமராமத்து பணிகளின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், பழனி பாலாறு அணையில் ரூ.47 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புனரமைக்கும் பணிகளும், கலையம்புத்தூர் வரத்து வாய்க்கால் ரூ.60 லட்சத்தில் சீரமைத்து பலப்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளன. இதன்மூலம் 608 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் பிரச்சினையும் தீரும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.பி. குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், மாவட்ட ஆவின் தலைவர் செல்லசாமி, பழனி ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர் முருகானந்தம், ஜெயலலிதா பேரவையின் பாலசமுத்திரம் செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் பிரேமா, தாசில்தார் பழனிசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story