ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்


ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 May 2020 7:43 AM IST (Updated: 25 May 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் ரூ.2½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளில் ரூ.2½ கோடியில் கான்கீரிட் தளம், சிறுபாலம், தானிய கிடங்கு, வடிகால் அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி புதுப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வடிகாலுடன் கூடிய கான்கீரிட் தளம் ரூ.56 லட்சத்திலும், கொக்கராயன்பேட்டை சந்தை மேம்பாடு ரூ.40 லட்சத்திலும், அம்பேத்கர் நகரில் ரூ.6 லட்சத்தில் கான்கீரிட் தளமும், எலந்தகுட்டையில் ரூ.16 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கவும், ரூ.12 லட்சத்தில் தானிய கிடங்கு கட்டும் பணியும், ரூ.15 லட்சத்தில் கான்கீரிட் தளம் அமைக்கவும் பூமிபூஜை நடந்தது. பல்லக்காபாளையத்தில் ரூ.12 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், ரூ.12 லட்சத்தில் ஆழ்துளை கிணறும், தட்டான்குட்டையில் ரூ.37 லட்சத்தில் கான்கீரிட் தளம் அமைத்தலும், அங்கன்வாடி கட்டிடம் ரூ.8 லட்சம் மதிப்பிலும், குப்பாண்டபாளையம் ஊராட்சியில் ரூ.49 லட்சத்தில் தார்சாலையும், சமயசங்கிலி அக்ரஹாரம் ஊராட்சியில் ரூ.2 லட்சத்தில் கழிப்பிடமும், ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கான்கீரிட் தளம் அமைக்கவும், களியனூர் ஊராட்சியில் குடையன்காடு வாய்காலில் ரூ.16 லட்சத்தில் சிறுபாலம கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்து கொண்டார்.

இதில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், பள்ளிபாளையம் யூனியன் தலைவர் தனலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் செந்தில், பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் துணைத்தலைவர் சுப்ரமணியம், வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தையில் மின்வாரிய பள்ளிபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தையும், குமாரபாளையம் அருகே வெப்படையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். மேலும் குமாரபாளையம் அம்மா உணவகத்தின் விரிவாக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும், ஆவத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தார்.

Next Story