தாம்பரத்தில் 4 பேருக்கு கொரோனா
தாம்பரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தாம்பரம்,
தாம்பரம் நகராட்சி கணபதிபுரம் லட்சுமி நகர் பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்த 38 வயது பெண், கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் வசிக்கும் 41 வயது பெண் ஊழியர் என தாம்பரம் நகராட்சியில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அனகாபுத்தூர் பகுதியில் 3 பேருக்கும், பல்லாவரத்தில் 4 பேருக்கும், பெருங்களத்தூரில் 3 பேருக்கும், பொழிச்சலூரில் 2 பேருக்கும், பம்மல், பீர்க்கன்காரணை, கீழ்கட்டளை பகுதியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள பவானி நகர் பகுதியில் நர்சு ஒருவர் சென்னை மூலக்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 பேர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நல்லூர் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story