பழனியில், அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்
பழனியில், அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பழனி,
கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பழனி 30-வது வட்ட அ.தி.மு.க. சார்பில் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், ஆவின் தலைவர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, சுப்புரத்தினம், வேணுகோபாலு, முன்னாள் எம்.பி. குமாரசாமி, ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் பிரேமா சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் அகிலாண்டம் காளிமுத்து மற்றும் 30-வது வார்டு நிர்வாகி சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story