எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தற்போதைக்கு நடத்தக்கூடாது - கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் வலியுறுத்தல்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தற்போதைக்கு நடத்தக்கூடாது - கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 May 2020 4:54 AM IST (Updated: 26 May 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இப்போதைக்கு நடத்தக் கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி தொடங்கப்படும் என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தற்போதைக்கு நடத்தக்கூடாது என்று கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மந்திரி சுரேஷ்குமாருக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உயிருக்கு ஆபத்து ஏற்படும்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி தொடங்கப்படும் என்று நீங்கள் அறிவித்து உள்ளர்கள். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. இத்தகைய ஒரு நெருக்கடியான நேரத்தில் தேர்வை நடத்துவது என்பது சரியல்ல.

முன்பு நான் உங்களிடம் பேசும்போது, கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு இருக்கவில்லை. அதனால் அந்த தேர்வை நடத்தலாம் என்று ஆலோசனை கூறினேன். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தற்போதைக்கு நடத்தக்கூடாது.

இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.ஜி.சித்தராமையா கூறிஉள்ளார்.

Next Story