மராட்டியத்தில் இருந்து நெல்லை- தூத்துக்குடிக்கு வந்த மேலும் 32 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு வந்த மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லை,
மராட்டியத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு வந்த மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று
வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மாவட்ட எல்லையில் கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 15 பேருக்கு...
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 282 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் யாருக்கும் தொற்று இல்லை. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை மாநகர பகுதியில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வங்கியில் காவலாளியாக உள்ளார். இதைதொடர்ந்து கே.டி.சி. நகர் பகுதியில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று யாருக்கும் தொற்று இல்லை.
தூத்துக்குடியில் 17 பேர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் இருந்த 14 பேருக்கும், குஜராத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story