பல லட்சம் ரூபாய் வசூல் செய்த பெண் கைது; வீட்டை பொதுமக்கள் முற்றுகை


பல லட்சம் ரூபாய் வசூல் செய்த பெண் கைது; வீட்டை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 May 2020 7:34 AM IST (Updated: 26 May 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூல் செய்த பெண் கைது செய்யப்பட்டார் . வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவர் பரமத்தி வேலூர், மோகனூர், பொத்தனூர் மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ரூ.2 ஆயிரம் செலுத்தினால் மே மாதம் 24-ம் தேதி ரூ.50 ஆயிரம் வரை குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறியுள்ளார். அதன்படி ஏராளமான பெண்கள் தலா ரூ.2 ஆயிரம் வீதம் பல லட்சம் ரூபாயை நிர்மலாவிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரூ.50 ஆயிரம் கடன் தர யாரும் வராததால் ரூ.2 ஆயிரம் கொடுத்த பெண்கள் நிர்மலாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் நிர்மலா சரிவர பதில் கூறாமலும், பணம் வாங்கிச்சென்ற திருச்சியை சேர்ந்த ஜெயராம் என்பவர் தலைமறைவாகி விட்டாதகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிர்மலா வீட்டை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முற்றுகையிட்ட பெண்களிடம் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நிர்மலாவிடம் ரூ.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் சிலர் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து நிர்மலாவை கைது செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவான ஜெயராமனை தேடி வருகின்றனர்.

Next Story