கொரோனா தாக்கத்தால் நிறுத்தப்பட்ட திருச்சி-பெங்களூரு இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியது
கொரோனா தாக்கத்தால் நிறுத்தப்பட்ட திருச்சி-பெங்களூரு இடையேயான விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
செம்பட்டு,
கொரோனா தாக்கத்தால் நிறுத்தப்பட்ட திருச்சி-பெங்களூரு இடையேயான விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
விமான சேவை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து விமான சேவைகளும் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-பெங்களூரு இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து இரவு 8.20 மணிக்கு இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் 66 பேர் திருச்சிக்கு வந்தனர். அவர்களை மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் 66 பேரும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
கலெக்டர் ஆய்வு
இதனை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார். இதற்கான முன்னேற்பாடுகளை ஆர்.டி.ஓ. விசுவநாதன், விமான நிலைய இயக்குனர் குணசேகரன், பொது மேலாளர் கோபால கிருஷ்ணன், துணை பொது மேலாளர் ஜேசிபிரான்சிஸ், மத்திய தொழில் பாதுகாப்புப்படை துணை கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
முன்னதாக திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்ல 52 பேர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். அவர்களின் அடையாள அட்டை, வேறு மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கான இ-பாஸ் ஆகியவற்றை பரிசோதனை செய்த பின்னரே விமான நிலைய வளாகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story