மேலூர் அருகே சூரக்குண்டு கண்மாயில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
மேலூர் அருகே சூரக்குண்டு கண்மாயில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மேலூர்,
மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் மாத்தி கண்மாய் உள்ளது. இது பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நீண்ட பெரிய கண்மாய் ஆகும். இங்கு தற்போது அரிய வகை வெளிநாட்டு பறவைகள் ஏராளமாக படையெடுத்து வந்துள்ளன.
தற்போது கோடை காலம் என்பதால் நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில் தேங்கிய தண்ணீரில் வாழும் மீன்கள், நத்தைகள் உள்ளிட்டவைகளை உண்பதற்காக இந்த பறவை இனங்கள் வந்துள்ளன.
அரிய வகை பறவை
வெளிநாட்டு பறவைகளுடன் தென்னிந்தியாவில் வாழும் “பெயிண்டெட் ஸ்டோக்” எனும் அரிய வகை பறவைகளும் இங்கு வந்து குவிந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வலசை திரும்பும் காலத்தால் இவை இங்கு வந்திருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் அதனுடன் 500-க்கும் மேற்பட்ட நாட்டு வகை கொக்குகளும் கண்மாய் முழுவதும் பரவி இருக்கின்றன. இதனை மேலூர் பகுதி மக்கள் கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story