திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது


திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2020 9:53 AM IST (Updated: 26 May 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் மதுரா சின்னசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் தங்கதுரை (29), கார்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

திருக்கோவிலூர்,

சம்பவத்தன்று, தங்கதுரை, கார்த்தி, சரவணன், அண்ணாதுரை, சிவா, அய்யப்பன் மற்றும் டி.கே.மண்டபம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் ஒன்று சேர்ந்து முருகதாசை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதை தடுக்க வந்த முருகதாஸ் மனைவி சத்யா(30), மகள் மீனா, உறவினர் மணிகண்டன் ஆகியோரையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் உள்பட 20 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கதுரை, கார்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Next Story