விபத்துகளை தடுக்க சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைப்பு
விபத்துகளை தடுக்க, கரூர் பகுதியில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
கரூர்,
விபத்துகளை தடுக்க, கரூர் பகுதியில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை இரண்டாக பிரிகிறது
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் சென்றவுடன், திருக்காம்புலியூர் ரவுண்டானா வருகிறது. சற்று தொலைவில் முனியப்பன்கோவில் பகுதியில் இருந்து கோவை மாவட்டத்திற்கும், ஈரோடுமாவட்டத்திற்கும் செல்லும் சாலை இரண்டாக பிரிகிறது. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக அச்சாலைகள இருந்து வரும் நிலையில் கரூர் நகரப்பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கோவை சாலையில் இருந்து ஈரோடு செல்லும் சாலைக்கு திரும்பும்போது ஈரோட்டில் இருந்து கரூர் வரும் வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
ஒளிரும் விளக்குகள்
மேலும் முனியப்பன் கோவில் பிரிவு அருகில் கோவை சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் சாலையை கடக்கும்போது ஒரு வகை அச்சத்துடனே கடக்கும் நிலை இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதத்தில் முனியப்பன் கோவில் அருகில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.இந்தநிலையில் தற்போது அப்பகுதியில் சாலைகள் பிரிந்து செல்வதை வாகன ஓட்டிகள் அறிந்து கொண்டு வாகனத்தின் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சோலார் அமைப்பு உதவியுடன் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோரிக்கை
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் கோவை,ஈரோட்டுக்கு என தனித்தனியாக சாலைகள் பிரிந்து செல்வதை அறியாத வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்துகளை தடுக்கும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய தீர்வாக இருந்தாலும், இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும் என்றனர்.
Related Tags :
Next Story