விழுப்புரம் அருகே காரில் இளம்பெண் கற்பழிப்பு
விழுப்புரம் அருகே காரில் வைத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
செஞ்சி,
விழுப்புரம் அருகே உள்ள கெடார் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் சுபாஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, சுடிதார் வாங்கி வைத்திருப்பதாகவும், அதை வாங்கிக்கொள்ள அலமேலு என்பவரது நிலத்துக்கு வருமாறு அழைத்தார்.
உடனே அந்த இளம்பெண், சுபாஷ் கூறிய இடத்துக்கு சென்றார். அங்கு சுபாஷ் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் மகன் விக்னேஷ்(25), பழனிவேல் மகன் சுபாஷ்(24) ஆகியோர் காருடன் நின்று கொண்டிருந்தனர். பின்னர் அந்த இளம்பெண் அவர்கள் அருகில் சென்றதும், விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் இளம்பெண்ணை பிடித்து காரில் ஏற்றியதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அந்த இளம்பெண்ணை காரின் பின்பக்க இருக்கையில் வைத்து ஒருவர் பின் ஒருவராக கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், மு.சுபாஷ், ப.சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story