வேலைவாய்ப்பு துறை சார்பில் இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பு துறை சார்பில்  இணையதளம் வழியாக இலவச பயிற்சி வகுப்புகள்   கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 May 2020 11:35 AM IST (Updated: 26 May 2020 11:35 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் இணையதள வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை



இலவச பயிற்சி வகுப்புகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பயிற்சி வகுப்புகள் ஏதும் நடத்தப்படவில்லை. மேலும் தேர்வர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதள வழியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுஉள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுஉள்ளது. தற்போது பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தே போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கு இப்பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆதார் எண்

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 9943438222, 8778970857, 04575-240435 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின் புத்தகங்கள், மாதிரி தேர்வு வினாத்தாள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. தேர்வர்கள் தங்களது பெயர், பாலினம், முகவரி மற்றும் ஆதார் எண்ணை கொடுத்து உள்ளே நுழைந்த பின் பயனீட்டாளர், பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். இந்த இணையதளத்தில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story