ஊரடங்கின்போது தூய்மையாக ஓடிய தண்ணீர்: ஆலைக்கழிவுகளால் நுரைபெருகி நிறம் மாறும் காவிரி
ஊரடங்கின்போது காவிரி ஆற்றில் தண்ணீர் தூய்மையாக ஓடியது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக ஆலைக்கழிவுகளால் தண்ணீர் நுரைபெருகி நிறம் மாறி ஓடுகிறது. காவிரியை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் ஒரு எல்லையாக அமைந்திருப்பது காவிரி ஆறு. ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக அமைந்திருப்பது காவிரி ஆறு. இதுதவிர பூம்புகார் வரை குடிநீராக, பாசன தண்ணீராக அனைத்து மாவட்ட மக்களுக்கும் இருக்கும் ஒரே நீர் ஆதாரம் காவிரியாகும். அதுமட்டுமின்றி மின்சார உற்பத்தி, மீனவர் களின் வாழ்வாதாரம் என்று பல்வேறு தேவை களையும் காவிரி நிறைவேற்றுகிறது.
காவிரி ஆறு, பல ஆண்டுகளாக சாக்கடை மற்றும் ஆலைக் கழிவுகளால் மாசுபட்டு இருந்தது. தண்ணீர் குறையும் போதெல்லாம் காவிரியில் வெறும் சாக்கடை மட்டுமே ஓடும் என்ற நிலை இருந்தது.
ஆனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே காவிரி ஆறு தூய்மை அடைய தொடங்கியது. குறிப்பாக கர்நாடக மாநிலம் முதல் தமிழகத்தின் காவிரிக்கரையோர மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலப்பது முற்றிலும் குறைந்தது. குடியிருப்பு பகுதி சாக்கடை மாற்று ஏற்பாடு இல்லாததால் கழிவுநீர் வந்து சேர்ந்தன. இருப்பினும், தண்ணீர் வழக்கத்தை விட மிகவும் தூய்மையாக இருந்தது.
ஈரோடு பகுதியில் பவானி முதல் கொடுமுடி வரையான பகுதிகளில் காவிரி தண்ணீரில் உப்பின் அளவு 600 டி.டி.எஸ். (தண்ணீரில் கலந்து உள்ள மொத்த திடப்பொருட்கள்), அதற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 2-வது வாரத்தில் காவிரியில் உப்பின் அளவு 200 முதல் 220 டி.டி.எஸ். அளவாக இருந்தது. அதுமட்டுமின்றி தண்ணீர் தூய்மையாக ஓடியது. இதேநிலையில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தால் காவிரியில் மண்ணோடு மட்கிப்போய் கிடந்த ரசாயன கழிவுகளைக்கூட சுத்திகரித்து முழு தூய்மையான ஆறாக காவிரி மாறும் நிலை இருந்தது.
ஊரடங்கு விதிமுறைகள் தளர்வு அறிவிக்கப்பட்டதுமே, காவிரியில் கழிவுகள் மீண்டும் கலக்கத்தொடங்கி விட்டன. நேற்று ஈரோடு வைராபாளையம் பகுதியில் காவிரியில் தண்ணீர் நிறம் மாறி நுங்கும் நுரையுமாக ஓடியது. ஏற்கனவே வறட்சியின் காரணமாக தண்ணீர் குறைந்து, காவிரி ஒரு ஓடைபோல காட்சி அளிக்கிறது. அதிலும் ஆலைக்கழிவுகள் கலந்து ஓடுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
காவிரியில் வரும் தண்ணீருடன் கலந்து விடும் இந்த சாக்கடை வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் தேங்கி நிற்கும். இதுபோல் ஈரோடு மாநகராட்சிக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் வழங்குவது வரை, இந்த கழிவு நீர்தான் நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீராக வழங்கப்படும் நிலையும் உள்ளது.
ஏற்கனவே பல்வேறு நோய்களால் அச்சம் அடைந்து உயிர் பயத்தில் வாழ்ந்து வரும் ஈரோட்டு மக்களுக்கு காவிரி தண்ணீர், காலிங்கராயன் தண்ணீர் விஷயத்தில் ஊரடங்கு சற்று நிம்மதியை தந்தது. 30 ஆண்டுகள் ஆகி விட்டது, இதுபோன்ற தூய்மையான தண்ணீரைப்பார்த்து என்று ஈரோட்டு மக்கள் மகிழ்ந்தது எல்லாம் இன்னும் ஓரிரு நாட்களில் வீணாகப்போய்விடும் என்றே தோன்றுகிறது. இதற்காக தொழிற்சாலைகள் இயங்கக்கூடாது என்பதல்ல. சட்ட திட்டங்களை மதித்து, தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள், குடிக்கும் பொதுமக்கள், கால்நடைகள், எதிர்கால சந்ததிகள் என அனைத்து விஷயங்களையும் நினைத்துப்பார்த்து ஆலை உரிமையாளர்கள் தங்கள் தொழிற்சாலை கழிவுகளை அப்படியே ஆற்றுக்கு திறந்து விடுவதை தவிர்க்க வேண்டும்.
அரசும், அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து தொடக்கத்திலேயே இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டாலும், தொழிற்சாலை கழிவுகளால் உருவாகும் புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட பல நோய்கள் பொதுமக்களை தாக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story