பிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்ப வராததால் - தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்ப வராததால் - தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 May 2020 4:45 AM IST (Updated: 27 May 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

பிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்ப வராததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வாணாபாடியை அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அதிஜ்குமார் (வயது 24), தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய மனைவி பிரசவத்திற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீடான வடகால் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து அதிஜ்குமார், மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் அவர், கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அதிஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அதிஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story