பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்; தர்மபுரியில் கலெக்டர் மலர்விழி ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் 4 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன் கிழமை) தொடங்கு கிறது. தேர்வு மையத்தை கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார்.
தர்மபுரி,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தர்மபுரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
தர்மபுரி, பாலக்கோடு கல்வி மாவட்டங்களுக்கு அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், அரூர் கல்வி மாவட்டத்திற்கு அரூர் இந்தியன் மெட்ரிக் பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக விடைத்தாள் திருத்தும் பணிக்காக இப்பள்ளிகளில் கூடுதலாக 2 துணை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
அதியமான்கோட்டையில் உள்ள 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மொத்தம் 87,960 விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பணியில் 86 முதன்மை தேர்வாளர்கள், 86 கூர்ந்தாய்வாளர்கள், 516 உதவி தேர்வாளர்கள் ஈடுபடுகிறார்கள். இதேபோன்று அரூரில் உள்ள 2 மையங்களுக்கு 45,883 விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த பணியில் 58 முதன்மை தேர்வாளர்கள், 58 கூர்ந்தாய்வாளர்கள், 348 உதவி தேர்வாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த 4 விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் மொத்தம் 1,306 ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விடைத்தாள் திருத்தும் மையங்களில் 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு ஆசிரியர்களின் வசதிக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தை கலெக்டர் மலர்விழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மையத்திற்கு வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். முககவசம் வழங்கவும், கிருமிநாசினிகள் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story