கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பனைக்குளம்,
கோவில்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து கோவில்களின் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்படி உச்சிப்புளியில் இந்து முன்னணி நகர் தலைவர் காளசுவரன் தலைமையில் ஒன்றிய பொது செயலாளர் கோபி முன்னிலையில் நிர்வாகிகள் கண்களை கட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர், மண்டபம் வராகி முத்துராஜ், ஈஸ்வரன், தினகரன், சக்தி, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் முன்பு நகர் தலைவர் பாலமுருகன் தலைமையிலும், ஆஞ்சநேயர் கோவில் முன்பு மாவட்ட செயலாளர் வீரபாண்டி தலைமையிலும், எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோவில் முன்பு நகர் செயலாளர் குமரன், நயினார்கோவில் நாகநாதர்கோவில் முன்பு ஒன்றிய செயலாளர் முனியசாமி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் முன்பு 2 இடங்களில் நகர் செயலாளர் நம்புராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையிலும் தோப்புக்கரணம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவில் முன்பு பொது செயலாளர் சுரேஷ்பாபு, சாயல்குடி சிவன்கோவில் முன்பு ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாரியூர் சிவன்கோவில் முன்பு ஒன்றிய துணை செயலாளர் முத்துச்சாமி, கடலாடி விநாயகர் கோவில் முன்பு மாவட்ட செயலாளர் சேர்மன் தலைமையிலும், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில் முன்பு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்
ராமேசுவரம் கோவிலின் மேற்கு கோபுர வாசல் முன்பு இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது தோப்புக்கரணம் போட்டும் கோவிலை திறக்க கோரியும் கோஷம் போட்டனர்.இந்த போராட்டத்தில் இந்து முன்னணியின்மாவட்ட பொதுசெயலாளர் ராமமூர்த்தி,மாவட்ட துணைதலைவர் சரவணன்,நகர் தலைவர் நம்புராஜன்,நகர்பொதுசெயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story