பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்; நாமக்கல்லில் கலெக்டர் மெகராஜ் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, வித்யாவிகாஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
குறிஞ்சி மேல்நிலைப்பள்ளியில் 84,423 விடைத்தாள்களும், வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 84,831 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.
இதையொட்டி அனைத்து விடைத்தாள் மையங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்களிலும் 184 அறைகளில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் 1,472 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளோம். நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அறைகளிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை அழைத்துவர வசதியாக 10 வழித்தடங்களில் பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மையங்களிலும் கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி உதவியுடன் உடல் வெப்பநிலையை கண்டறிய சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட கல்வி அதிகாரி உதயகுமார், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story