ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 May 2020 9:42 AM IST (Updated: 27 May 2020 9:42 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் நகராட்சி 19-வது வார்டு பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியூர் சென்றுவிட்டு கடந்த 24-ந்தேதி வீடு திரும்பினார்.

ஆத்தூர்,

 கரிகாலன் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், வடமாநிலத்தில் இருந்து விட்டு ஒருவர் எங்கள் பகுதிக்கு வந்துள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம், ஆகவே அந்த நபரை தனிமைப்படுத்த வேண்டும், என கூறினர்.

இதையடுத்து நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் தூய்மை பணியாளர்கள் அங்கு சென்றனர். அந்த நபர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனக்கூறி அவரை தனிமையில் இருக்க கூறிவிட்டு அவர் வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

Next Story